பொதுமருந்துகளை பரிந்துரைக்காத மருத்துவர்களுக்கு அபராதம்.! தேசிய மருத்துவ கமிஷன் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பொதுமருந்துகளை பரிந்துரைக்காத மருத்துவர்களுக்கு அபராதம்.! தேசிய மருத்துவ கமிஷன் அதிரடி.!

மருத்துவர்களுக்கான கட்டுப்பாடு விதிமுறைகள் கடந்த 2002 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ கவுன்சிலால் உருவாக்கப்பட்டது. அந்த விதிமுறைகளின் படி, பொது மருந்துகளையே மருத்துவர்கள் பரிந்துரை செய்ய வேண்டும்.

ஆனால், அவ்வாறு பரிந்துரைக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களுக்கான புதிய கட்டுப்பாடு விதிகளை, தேசிய மருத்துவ கமிஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நோயாளிகளுக்கு பொது மருந்துகளையே மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். இதனை மீறுவோருக்கு, முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதன்பிறகு அவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு உத்தரவிடப்படும்.

மேலும், அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் இந்த குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், பணியாற்றுவதற்கான லைசென்ஸ் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். காப்புரிமை பெறாமல் விற்கப்படும் மருந்துகளை பரிந்துரை செய்யக் கூடாது.

பொது மருந்துகள், 30 - 80 சதவீதம் வரை விலை குறைவானவை. மக்களுக்கு குறைந்த விலையில், தரமான மருந்துகள் கிடைப்பதற்காகவே இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது" என்று அந்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

penalty to doctors for no prescribe generic drugs.


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->