அம்பேத்கரின் சிந்தனைகள் அடிப்படையில் நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் - மாயாவதி.! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற திறப்புவிழாவில் கலந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது நியாயமற்றது என விமர்சித்து இருந்தார். 

இருப்பினும், இந்த திறப்புவிழாவிற்கு அவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தபோதும், மற்ற பணிகளின் காரணமாக அவர் பங்கேற்கவில்லை என்று அவரே கூறியுள்ளார். 

இத்த்கைய நிலையில், மாயாவதி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், "புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு இருப்பதற்கு மத்திய அரசுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கின்றேன். 

டாக்டர். அம்பேத்கரின் மனிதாபிமான சிந்தனைகளின் அடிப்படையில், மற்றும் அவர் உருவாக்கி இருக்கும் புனித அரசியலமைப்பு சட்டத்தின் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் நாட்டு மக்களின் நலன் கருதி புதிய நாடாளுமன்றமானது செயலாற்ற வேண்டும். அது தான் பொருத்தமானதாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament should act based on Ambedkar's thoughts Mayawati


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->