மத்திய பிரதேசத்தில் பரபரப்பு.. பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநில மாவட்ட தலைமையகத்தில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழங்குடியினர் வாழும் சிங்கர்பூர் பகுதியில் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியில் ஒரு கடையில் இருந்து காரமான பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பானிபூரி விற்பனையை தடுத்து வைக்கப்பட்டு சிற்றுண்டி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார். பானிபூரி விற்பனை செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pani poori ate 97 childrens admitted hospital in madhya pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->