பங்குனி உத்திர திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில் இந்தாண்டுக்கான திருவிழா நாளை  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனையடுத்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று  மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. ஆனால் நாளை பூஜைகள் எதுவும் செய்யப்படாது.

இதனையடுத்து நாளை  காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. அதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மேலும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5ம் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து அன்று மாலை கொடி இறக்கப்பட்டு 10வது நாள் திருவிழா நிறைவு பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panguni uthiram festival sabarimalai Ayyappan temple today open


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->