இன்றைய வரலாறு.. சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் பிறந்த தினம்.! - Seithipunal
Seithipunal


சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1887ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தார்.

யோகியாக, தாந்த்ரீக ஞானியாக விளங்கிய இவர், படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார். 'விஷீத்த வாணி", 'அகண்ட மஹாயோக்", 'பாரதிய சன்ஸ்க்ருதி கீசாதனா", 'தாந்த்ரிக் சாஹித்ய" உட்பட பல நூல்களைப் படைத்தார்.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1934ஆம் ஆண்டு 'மகாமகோபாத்தியாய" விருது வழங்கி சிறப்பித்தது. பத்ம விபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

வேதம், பண்டைய இந்திய வரலாறு, புராணங்கள், இந்திய - ஐரோப்பிய இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர். சாஸ்திரங்கள் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருந்த கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தார்.

தத்துவங்கள், மதங்கள் தொடர்பான 1,500 புத்தகங்கள் கொண்ட நூலகத்தை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார். புத்தக அறிவு போதாது, அது சுய அறிதலோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுவார். தலைசிறந்த தத்துவ ஞானியான பண்டிட் கோபிநாத் கவிராஜ் 1976ஆம் ஆண்டு மறைந்தார்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்

1951ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி மலையாள நடிகர் மம்முட்டி, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகே பிறந்தார்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி மறைந்தார்.

1979ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி இ.எஸ்.பி.என்., தொலைக்காட்சி தனது முதலாவது ஒளிபரப்பை துவக்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pandit gopinath kaviraj birthday today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->