திரிபுராவில் 1,630 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் உள்ள பெட் பகான் பகுதியில் அசாமிலிருந்து அகர்தலா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்றில் போதை பொருள் கடத்தப்படுகிறது என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திரிபுரா போலீசார், சி.ஆர்.பி.எப். பட்டாலியன் 140, 28 பட்டாலியன் அசாம் ரைபிள்ஸ் மற்றும் 3-வது பட்டாலியன் டி.எஸ்.ஆர். பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக வாகன சோதனை நடத்தினர். அதற்காக சோதனை சாவடி ஒன்றும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டது. 

அப்போது, லாரி ஒன்றில் ரப்பர் கட்டுகளுக்கு அடியில் காய்ந்த நிலையிலான கஞ்சா வகை போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 1,630 கிலோ எடை கொண்ட அந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.1.63 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பாக தலாய் பகுதியில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கடந்த ஆண்டு ரூ.36 கோடி மதிப்பிலான சட்டவிரோத போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், கடந்த 2022-ம் ஆண்டு ரூ.17 கோடி மதிப்பிலும், 2021-ம் ஆண்டு ரூ.3 கோடி மதிப்பிலும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one kg drugs seized in tiripura


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->