நடுக்கூடத்தில் ஒரு குண்டு.. அடுத்து பக்கவாட்டில் ஒரே நேரத்தில் 2 குண்டுகள்.!! நேரில் கண்டவர்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரியில் அக்டோபர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 29-ம் தேதி நண்பகல் வரை 3 நாள் வருடாந்திர கிறிஸ்தவ மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமார் 2,500 பேர் பதிவு செய்திருந்தனர். அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் கிருத்துவ ஜெப மாநாடு நடைபெறும் மண்டபத்திற்குள் பிரார்த்தனை தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு அடுத்த 3 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது.

இதில் முதல் குண்டுவெடிப்பு மண்டபத்தின் மையத்திலிருந்தும், அதைத் தொடர்ந்து மண்டபத்தின் இருபுறமும் ஒரே நேரத்தில் 2 குண்டுவெடிப்புகளும் பிரார்த்தனை முடிந்த சிறிது நேரத்தில் நிகழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் கேரள செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

நேரில் கண்ட சில சாட்சிகள் குண்டுவெடிப்பு மண்டபத்தின் மையத்தில் இருந்து வந்ததாக கூறியுள்ளனர். அனைவரும் பிரார்த்தனையில் இருந்த போது நிகழ்த்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவம் கண்மூடித்தனமானது என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த கிறித்துவ ஜெப கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் என சுமார் 2300க்கும் மேற்பட்டோர் கூடி இருந்ததாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் குண்டு வெடிப்பு மிகவும் துரதிஷ்டவசமானது என கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநில டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், மற்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் கூடுதல் தகவல்களை பெறவும் உத்தரவிட்டுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One bomb in middle and other 2 bomb on side in hall in Kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->