ஒரே மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்... அரசு ஊழியர்கள் உற்சாகம்..!! தமிழகத்தில் எப்பொழுது..?? - Seithipunal
Seithipunal


மத்திய மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன்படி கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதனை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்கும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு பதவி ஏற்ற கொண்டார். இந்த நிலையில் முதல்வராக பதவி ஏற்று ஒரே மாதத்திற்குள் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் பொழுது காங்கிரஸ் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அறிவித்திருந்தது. அதனை பாஜக கடுமையாக எதிர்த்தது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பே இல்லை என பாஜக பிரச்சாரம் செய்தது. ஆனால் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி இமாசலப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வுத் திட்டத்தை அமல்படுத்தும் கோப்பில் நேற்று இரவு இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு கையெழுத்துள்ளார்.

இதன் மூலம் இந்தியாவில் 5வது மாநிலமாக இமாச்சல் பிரதேசத்தில் பழைய ஓய்வூதி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் எப்பொழுது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old Pension Scheme came effect in Himachal Pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->