திருமண நிகழ்ச்சியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலி!  - Seithipunal
Seithipunal


கேரளா, மூணாறு அருகே தென்மலா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பால்ராஜ் (வயது 79) என்ற முதியவர் கலந்து கொண்டார். 

நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகே காட்டு யானை புகுந்துள்ளது. திருமண வீட்டில் ஒலிபெருக்கி இருந்ததால் காட்டு யானை வருவதை யாரும் கவனிக்கவில்லை. 

இந்நிலையில் காட்டு யானை வருவதை பார்த்த பால்ராஜ் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பிக்க முயன்றார். வயது முதிர்வு காரணமாக அவரால் நீண்ட தூரம் ஓட முடியாததால் பால்ராஜை யானை தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பின்னர் அவரை காட்டு யானை மிதித்து கொன்றது. 

இதனைப் பார்த்த திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்த உடனடியாக போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வனத்துறையினர், முதியவரை கொன்ற யானை அதே பகுதியில் உள்ளதா அல்லது வனப்பகுதிக்குள் சென்று விட்டதா என தேடி வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சியில் முதியவர் ஒருவரை யானை தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man died attacked wild elephant


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->