ஒடிசா ரயில் விபத்து.. இலவச பேருந்து சேவை மற்றும் நிவாரணம் - முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை, பெங்களூர் ரயில்கள் என 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து காரணமாக நாடு முழுவதும் 95 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் விபத்து நடந்து 40 மணி நேரம் ஆகிய நிலையில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது‌. அந்த வகையில் தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் என அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளால் ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களில் இருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அந்த வகையில் பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும் வரை கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisaa train accident CM Naveen Patnaik announced relief fund and free Bus service


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->