இந்தியாவில் 6 மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடமாநிலங்களில் அதாவது, டெல்லி மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து தற்போது காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்த பனிபொழிவு வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றனர். இதனால், சாலைகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் இரண்டாவது நாளாக 6.3 டிகிரி செல்சியஸாக பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, இமாசலபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடும் பனி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு ராஜஸ்தான், பிகார் மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் இன்று காலை வழக்கத்தை விட அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால், சாலைப் போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால், விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next three days six state heavy snowfall in india


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->