மருமகனை திகைக்க வைத்த தலை பொங்கல் - 225 உணவுகளுடன் அசத்திய மாமியார்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் மாவட்டம் ராஜவரம் கிராமத்தை சேர்ந்தவர் காக்கிநாகேஸ்வரராவ்-லட்சுமி தம்பதியினரின் மகள் ஜோத்ஸ்னா. இவருக்கும் விஜயவாடாவை சேர்ந்த லோகேஷ்சாய் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்த நிலையில், காக்கிநாகேஸ்வரராவ்-லட்சுமி தம்பதியினர் மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி ‘தலை’ விருந்துக்கு வருமாறு புதுமண தம்பதியை அழைத்துள்ளனர். அதன் படி புதுமணத் தம்பதிகளும் பெண் வீட்டிற்கு வந்துள்ளனர். 

அங்கு பெண்ணின் பெற்றோர் மருமகன் வாழ்நாளில் மறக்க முடியாத வகையில் பல்வேறு வகையான இனிப்பு மற்றும் அறுசுவை விருந்து என்று மொத்தம் 225 வகையான உணவு வகைகளை பரிமாறி விருந்து வைத்தனர். இதைப்பார்த்த மருமகன் லோகேஷ்சாய் வியப்பில் ஆழ்ந்தார். இதையறிந்த லோகேஷ்சாயின் தாயார் தீப்தி, தனது மகனுக்கு அவனது மாமியார் வீட்டில் வழங்கிய உபசரிப்பை பார்த்து மகிழ்ச்சியடைந்தார். 

இந்த விருந்து பற்றி அப்பகுதி மக்கள் பேசியதாவது, ”இது எங்களது மாவட்ட மக்களின் வழக்கமான உபசரிப்புதான். இது எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து செய்து வருகிறோம். இந்த விருந்து உபசரிப்பு எங்களது அன்பு, பாரம்பரியம் மற்றும் மரியாதைக்கு சான்றாகும்” என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new married couples celebrate thala pongal with 225 dishes in andira


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->