அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா பாதிப்பு.. மத்திய அரசு அவசர ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிரோலா என்ற புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், 50க்கும் மேற்பட்ட நாடுகளில் எரிஸ் என்ற மற்றொரு கொரோனாவும் பரவி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நேற்று உயர்மட்ட ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா, சுகாதார செயலாளர் சுதான்ஷ் பந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய வகை கொரோனா குறித்த விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் தற்போதைய கொரோனா பரவல் நிலவரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், புதிய வகை கொரோனாவை கண்டறியும் வகையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவருக்கு மரபணு சோதனையை தீவிர படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New covid spread central govt discussion


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->