புதுச்சேரி : அடித்து பணம் பறித்த தனியார் பேருந்து ஊழியர் கைது.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு தாலுகாவிற்கு உட்பட்ட புளியரம்பாக்கத்தை சேர்ந்தவர் கணபதி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், இவர் வீட்டுக்கு தேவையான மின்சார வயர்கள் வாங்குவதற்கு தனது உறவினருடன் புதுச்சேரிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர்களை வரச்சொன்ன எலக்ட்ரீசியன் வராததால் அன்று இரவு ஊருக்கு திரும்புவதற்கு புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களிடம் வாலிபர் ஒருவர் அவசரமாக பேசவேண்டும் உங்கள் செல்போனை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். 

அதை உண்மை என்று நம்பிய கணபதி அந்த வாலிபரிடம் செல்போனை கொடுத்துள்ளார். இதையடுத்து செல்போனை வாங்கிய அந்த வாலிபர் செல்போனில் பேசியபடி வேகமாக நடந்து சென்றார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற கணபதி செல்போனை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் சரக்கு வாங்கி கொடுத்தால் தான் செல்போனை திரும்ப தருவேன் என்று தெரிவித்துள்ளார். வேறு வழியில்லாமல் கணபதியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

ஆனால் அந்த நேரத்தில் அங்குள்ள மதுக்கடைகள் அனைத்தும் மூடியிருந்ததால் வேறு ஒரு இடத்தில் மது கிடைக்கும் என்று கூறிய அந்த வாலிபர் கணபதி மற்றும் அவருடைய உறவினைரையும் இந்திராகாந்தி சிலை நோக்கி அழைத்து சென்றுள்ளார். அப்போது கணபதியின் உறவினர் தனக்கு கால் வலிக்குது என்று கூறி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டதனால், கணபதி மட்டும் அந்த வாலிபருடன் சென்றார். 

இதையடுத்து, கணபதியை இந்திராகாந்தி சிலை அருகே ஒரு இருட்டான பகுதிக்கு அழைத்து சென்ற அந்த வாலிபர், திடீரென கத்தியை காட்டி, ''உன்னிடம் உள்ள பணத்தை கொடு இல்லையென்றால் குத்திவிடுவேன்'' என்று மிரட்டி, அருகில் இருந்த கட்டையால் கணபதியின் தலையில் தாக்கி, கணபதி வைத்திருந்த ரூ.9 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு சென்றுள்ளார். 

இதில், காயமடைந்த கணபதி புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், இந்த சம்பவம் குறித்து கணபதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பேருந்து நிலைய பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிந்துள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது, இந்த சம்பவத்தைச் செய்தது, கண்டமங்கலத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஊழியரான விக்னேஷ்வர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near puthuchery private bus company employee arrested for money extorting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->