சிறுமியை பலாத்காரம் செய்த ஆறு இளைஞர்கள்-வீடுகளை இடித்த மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் பதினாறு வயது சிறுமி ஆறு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை அன்று ரேவா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் நைகர்ஹி பகுதியில் நடந்தது. இந்த வழக்கில், மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் கூற்றுப்படி, அவர் சனிக்கிழமை மதியம் நண்பருடன் கோவிலுக்குச்  சென்றுவிட்டு இருவரும் அங்கேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது, அங்கு வந்த 6 இளைஞர்கள் சிறுமியையும் அவரது நண்பரையும் மிரட்டி இருவரையும் அருகில் உள்ள அருவிக்கு கொண்டு சென்ற அந்த இளைஞர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். 

அதன்பின், பலாத்காரம் செய்த இளைஞர்கள் அந்த சிறுமியை அடித்து அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சிறுமியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின்னர், சம்பவம் குறித்து போலீசார் சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த சிறுமியின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். மீதமுள்ள மூன்று குற்றவாளிகளும் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் தேடப்பட்டு வருவதாக போலீஸ் எஸ்.பி சோங்கர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அரசு உத்தரவுப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சொந்தமான சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி இன்று நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் வீடுகளை இடித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அரசு உத்தரவுப்படி, இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. 

இதுகுறித்து ரேவா மாவட்ட கலெக்டர் மனோஜ் புஷ்ப் தெரிவிக்கையில், "நைகர்ஹியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மற்றும் மவுகஞ்ச் சப்-டிவிஷனல் அதிகாரி போலீஸ் முன்னிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரின் வீடுகளும் இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் தகர்க்கப்பட்டது. மீதமுள்ளவர்களின் வீடுகளில் சோதனை முடிந்த பின் இடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near matyapradesh 16 years girl sexually harresment case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->