பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் உள்பட 10 போலீசார் இடைநீக்கம்.!. - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்பேத்கர் மற்றும் மகாத்மா ஜோதிபா புலே உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து பள்ளிக்கூடங்களை தொடங்கினர் என்று மாநில உயர்கல்வி துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் பேசியிருந்தார். 

அவருடைய பேச்சுக்கு மாநிலத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர். 

அவர்கள் மூன்று பேரும் அம்பேத்கரால் தொடங்கப்பட்ட சமதா சாய்னிக் தல் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பத்து போலீசாரை புனே போலீஸ் கமிஷனர் அங்குஷ் ஷிண்டே அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "அமைச்சர் மீது கருப்பு மை வீசப்பட்ட சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் உள்பட பத்து போலீசாரை பணி இடைநீக்கம் செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் அமைச்சரின் வருகையின் போது அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra ten police officers suspend


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->