குஜராத் : நானும் வருவேன்... தனியார் நிறுவனத்தில் வலம் வந்த ஆண் சிங்கம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில், ஆண் சிங்கம் ஒன்று புகுந்துள்ளது. 

ஆனால், அந்த சிங்கம் வந்த வழி தெரியாமல் நாலாபுறமும் பார்த்தபடி அங்கேயும் இங்கேயுமாக சென்று கொண்டிருந்தது. அதன்பின்னர் அந்த சிங்கம் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளது. 

இவை அனைத்தும் நிறுவனத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி உள்ளது. இதை பார்த்த நிறுவன ஊழியர்கள் அந்த வீடியோவை வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். 

இதையடுத்து அந்த சிங்கத்தை வன துறை அதிகாரிகள் தேடி வந்துள்ளனர். ஆனால், அந்த சிங்கம் எந்த பகுதிக்கு சென்றது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இதுவரைக்கும் அவர்களால் அந்த சிங்கத்தை பிடிக்கவும் முடியவில்லை. 

சமீபத்தில் இதேபகுதியில், ஒரு கூட்டமாக ஆண் மற்றும் பெண் என்று மொத்தம் எட்டு சிங்கங்கள் சுற்றி திரிந்தன. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் நிறுவன வளாகத்திற்குள் ஆண் சிங்கம் தனியாக வந்தசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near gujarat male lion roamed in private company


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->