ஆந்திரா : போலீசாரைப் பார்த்து சாலையில் 500 நோட்டுகளை வீசிச்சென்ற நபர்கள்.! - Seithipunal
Seithipunal


நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் எம்.எல்.சி. தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்டோ ஒன்று ஸ்ரீகாகுளத்தில் இருந்து நரசன்னபேட்டை வழியாக மடபம் சுங்கசாவடி நோக்கி மிக வேகமாக வந்தது. 

அந்த நேரம் சுங்க சாவடியில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதைப்பார்த்த, ஆட்டோவில் இருந்தவர்கள் தங்களிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசிவிட்டு ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஒட்டிச் சென்றனர். 

இதைக்கவனித்த சுங்க சாவடி ஊழியர்கள் ஆட்டோவை பிடிப்பதற்கு வேகமாகச் சென்றனர். ஆனால் அதற்குள் ஆட்டோ வேகமாக சென்று இருட்டில் மறைந்தது. இதற்கிடையே சாலையில்  500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச் சென்று பணத்தை எடுத்தனர். 

இதையடுத்து, தேர்தல் கண்காணிப்பாளர்கள் சாலையில் இருந்த பணத்தையும் பொதுமக்கள் எடுத்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அந்த பணத்தை தேர்தல் கண்காணிப்பாளர்கள் போலீசில் ஒப்படைத்தனர். 

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாலையில் பணத்தை வீசி சென்றவர்கள் யார்? எதற்காக பணத்தை எடுத்துவந்தார்? என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andira young mans threw money on road after see police officer


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->