ஆந்திரா : மளிகைப்பொருட்கள் தருவதாக கூறி 24 ஆயிரம் பேரிடம் ரூ.8.09 கோடி மோசடி - 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜய நகரத்தை சேர்ந்தவர் மஜ்ஜி அப்பல ராஜு. குடிநீர் சுத்திகரிப்பு ஆளை வைத்துள்ளும் இவர் தனது நண்பர்களான ரமேஷ் மற்றும் பதிவாடா ஸ்ரீலேகா உள்ளிட்டோருடன் சேர்ந்து பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் தருவதாகவும், மாதம் ரூ.300 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.3600 கட்டினால் ரூ.5,000 மதிப்பிலான மளிகை பொருட்கள் தருவதாகவும் விளம்பரபடுத்தி வந்தனர்.

இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து, மொத்தமாக மளிகைப் பொருட்கள் கிடைப்பதால் பொதுமக்கள் போட்டி போட்டு பணத்தை கட்டினார்கள். இதற்காக அந்தந்த பகுதியில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டனர். அதன் மூலம் மாவட்டம் முழுவதிலிருந்து மொத்தம் 24 ஆயிரம் பேர் ரூ.8.09 கோடி பணம் கட்டி இருந்தனர். 

தற்போது, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பணம் கட்டியவர்களுக்கு இதுவரைக்கும் மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை. அதனால், பொதுமக்கள் பணம் கட்டிய அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, பணம் கட்டிய ஏஜெண்டுகளுக்கு போன் செய்து பார்த்த போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

இதனால், சந்தேகமடைந்த மக்கள் சம்பவம் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதன் படி, அனைத்து வழக்குகளும் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பட்டேல் தலைமையிலான போலீசார் பண மோசடியில் ஈடுபட்ட ராஜு, ரமேஷ், பதிவாடா ஸ்ரீலேகா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். 

அதன் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "புதியதாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு ரூ 3.50 கோடி முதலீடு செய்யப்பட்டதால் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மளிகை பொருட்கள் வழங்க முடியவில்லை என்றத் தெரிவித்தனர். 

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மளிகை பொருட்கள் தருவதாக கூறி 24 ஆயிரம் பேரிடம் மோசடி செய்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andhira six peoples arretsed for cheating twenty four thousand peoples


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->