பல் பிடுங்கி பல்வீர் சிங் விவகாரம்.. சிக்கியது தமிழ்நாடு போலீஸ்.. மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக்கத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிரிந்த பட்ட விவகாரம் உலகத்தையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளிக்குமாறு நான்கு முறை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ் இருக்கு தமிழ்நாடு காவல்துறை உரிய விளக்கம் அளிக்காததால் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 ன் பிரிவு 13 இன் படடி பிப்ரவரி 23ஆம் தேதிக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில் மார்ச் 1ம் தேதிதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு தேவையான அறிக்கையுடன் தமிழ்நாடு டிஜிபி ஆஜராக வேண்டும் என  தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National human communication sent notice to tnpolice


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->