குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்காத நபர்களின் பெயரை நீக்க முடிவு! - Seithipunal
Seithipunal


தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொது விநியோக திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளே சாரும். போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள சூழ்நிலையில் இரண்டு மாநிலங்களில் குடும்ப அட்டைகள் வைத்துள்ள நபர்களை மத்திய அரசு கண்டறிந்து புதுச்சேரி அரசுக்கு பட்டியலை அனுப்பி உள்ளது. 

அந்தப் பட்டியலில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 13,400 பேர் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள குடும்ப அட்டைகளில் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 11,135 பேரும், காரைக்காலில் 214 பேரும், ஏனாமில் 2014 பேரும், மாகியில் 10 பேரும் சிக்கியுள்ளனர். இவர்கள் குடும்ப அட்டைகளில் உள்ள பெயரை நீக்க கடைசி வாய்ப்பை புதுச்சேரி அரசு தந்துள்ளது. 

அதேபோன்று புதுச்சேரியில் 60 ஆயிரம் பேர் தங்கள் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். அந்த மாநிலத்தில் நூறு சதவீதம் ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத நபர்கள் பிற மாநிலங்களிலோ வெளிநாடுகளிலோ இருக்கலாம் என புதுச்சேரி அரசு சந்தேகிக்கிறது. இதன் காரணமாக குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைக்காவிட்டால் அவர்கள் பெயர்களை நீக்க புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடுமைப் பொருள் வழங்க துறையின் அலுவலகத்தில் ஆதார் எண் இணைப்பு மையம் இயங்கி வருகிறது. பொதுமக்கள் தகுந்த ஆவணங்களுடன் நேரடியாக வந்து குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Name remove from family card not link aadhar number


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->