உ.பி : என்கவுண்டரில் சம்பந்தப்பட்ட 12 போலீசார் மீது கொலை வழக்கு - நீதிபதி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள டியோபாண்ட் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசாருக்கும், மாடு இறைச்சி கடத்தல் கும்பலுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலில், சீஷான் ஹைடர் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இதனால், ஹைடர் குடும்பத்தினரும், கிராம மக்களும் சேர்ந்து, கொல்லப்பட்டவர் அப்பாவி என்றும், பசுக்கொலை மற்றும் கால்நடை கடத்தல் வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்றும் போலீசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஹைடரின் மனைவி புகார் அளித்தார். அந்த புகாரில், "விசாரணைக்கு அழைத்து சென்ற எனது கணவரின் சாவுக்கு போலீசாரே காரணம். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமல்லாமல், அவர் முதலமைச்சரின் பிரிவுக்கும் புகார் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். அதன் படி, நேற்று முன்தினம் பன்னிரண்டு போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder case file to twelve police officers for man encounter in uttar pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->