முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்த தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள்.! - Seithipunal
Seithipunal


மும்பையில் குண்டுவெடிப்பு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிம் தலைமையில் உள்ள அவரது கூட்டாளிகள், அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம்பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில் ஈடுபட்டு வந்த சோட்டாசகீலின் மைத்துனர் சலீம் குரோஷி மற்றும் தொழிலதிபர் ரியாஸ் பாட்டி ஆகியோரை மும்பை போலீசார் கடந்த மாதம் கைது செய்து, இவர்கள் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையின் போது அவர்களுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரின் அடையாளம் தெரியவந்தது. அதன் படி, மிரட்டி பணம் பறிக்க முயன்ற அஜய் கந்தா, பிரோஷ் சம்தா, சமீர்கான், பப்பா பட்டான், அம்ஜத் ரெட்கர் ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். 

வெர்சோவாவை சேர்ந்த தொழிலதிபரை மிரட்டி ரு.30 லட்சம் கார் மற்றும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கேட்டு மிரட்டி உள்ளதாக ஏற்கனவே 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai money cheeting gang arrested


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->