ஊழலில் ஈடுபடும் எந்த நபரும், நிறுவனமும் தப்ப முடியாது - மோடி கடும் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதிவரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,

ஊழல் சாதாரண குடிமகனின் உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது மற்றும் அதன் கூட்டு சக்தியைப் பாதிக்கிறது. மேலும் ஊழலை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா நடைபோட்டு வருகிறது. ஊழலில் ஈடுபடும் எந்த நபரும், நிறுவனமும் தப்ப முடியாது என்றார். 

நாட்டில் இன்று ஒவ்வொரு நேர்மையான நபரும் தங்களைப் பற்றி பெருமை கொள்ளும் நம்பிக்கையான சூழல் உருவாகியுள்ளது. ஊழலை வேரறுக்க, முழு செயல்முறையும், முழு அமைப்பும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த 25 ஆண்டு பயணத்தில் மகத்தான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது அனைவரின் கடமை. வலுவான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த இது ஒரு வாய்ப்பாகும்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம், வாழ்க்கையில் நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi warns No person or organization involved in corruption can escape


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->