ராகுல் காந்தியுடன் பாதையாத்திரையில் பங்கேற்கும் கமல்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை பாத யாத்திரையில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். 

அந்த அழைப்பை ஏற்ற கமல்ஹாசன் பாத யாத்திரையில் டெல்லியில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட கமல்ஹாசன் டெல்லி சென்று, இன்று மாலை ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த பாத யாத்திரையில் கமலுடன் சுமார் 250 மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் பங்கேற்க உள்ளனர். பின்னர் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM party leader kamalhassan participate in ragulganthi pathayathra


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->