ஒடிசா முதல்வருடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு..!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. புவனேஸ்வரை அடுத்த ரூர்கேலாவில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி கிராமத்தில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலக கோப்பை ஹாக்கி போட்டியை காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களை பார்வையிடவும் புவனேஸ்வர் சென்றுள்ளார். 

அப்பொழுது ஒரிசாவில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். அதே போன்று நேற்று நடைபெற்ற இந்தியா-வேவ்ஸ் அணியிலான ஹாக்கி போட்டியையும் கண்டு களித்தார். அதனைத் தொடர்ந்து ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் சந்தித்து பேசி உள்ளார். ஒரிசா மாநில முதல்வருக்கு நினைவு பரிசையும் வழங்கியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Udayanidhi meeting with Odisha CM Naveen patnaik


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->