கட்சா எண்ணெய் விலையை பார்க்கும் போது பெட்ரோல், டீசல் விலை குறையாமல் உள்ளது - பழனிவேல் தியாகராஜன் ட்விட்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதன் காரணமாக சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. 

இதையடுத்து, தமிழகத்தில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 6 ரூபாய்க்கும் இறக்கம் கண்டது. இந்நிலையில், மாற்றமில்லாமல், 200வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைக் குறித்து, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும், அதன் மூலம் வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் குறையாதது போல் தெரிகிறது.

மேலும், கச்சா எண்ணெய் விலை குறைப்போடு ஒப்பிட்டு பார்க்கும் போது பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உள்ளது. பெட்ரோல், டீசல் வேறு எதன் மூலம் எடுக்கப்படுகிறது? என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister palanivel thiyagarajan twitter post for petrol diesel price


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->