எதிர்க்கட்சிகளால் கூட பாஜக அரசை குறை கூற முடியாது - மத்திய அமைச்சர் அமித்ஷா.! - Seithipunal
Seithipunal


வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 ஆண்டுகால சாதனைகளை விளக்க நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,    எதிர்க்கட்சிகளால் கூட பிரதமர் மோடியின் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது. 9 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் இந்தியாவின் நிலத்தில் ஊடுருவி நம் ராணுவ வீரர்களை கொன்றனர். ஆனால் அப்போதைய காங்கிரஸ் அரசு வேடிக்கை பார்த்தது.

ஆனால் மோடி பிரதமர் ஆன பிறகு பாகிஸ்தான் அதையே செய்ய முயன்ற போது நாம் 10 நாட்களுக்குள் சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம்.

பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சோனியா மன்மோகன் சிங் ஆட்சி 10 ஆண்டுகள் நீடித்தது. அங்கு 10 ஆண்டுகளில் ஊழல்களும், மோசடிகளும் மட்டுமே நடந்தது. காங்கிரஸ் 12 லட்சம் கோடி ரூபாய் அளவில் செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டுகள் ஆட்சியில் எதிர்க்கட்சிகளால் கூட ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாத அளவுக்கு வெளிப்படையான ஆட்சியை நடத்தி வருகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister amitsha speech about Congress corruption


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->