நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக்கொள்ளட்டும் - அமித்ஷா பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் சப்ரூம் என்ற இடத்தில் மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் பாஜக ரத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். 

அதன் பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:- "காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக நீதிமன்றத்திலேயே வைத்து இழுத்தடித்தன. 

ஆனால்,உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். 

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1-ந் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும். பிரதமர் மோடியின் கைகளில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. பத்து நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர்" என்று அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister amithsha start on BJP Ratha Yatra in tiripura


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->