சுரங்க விபத்தில் சிக்கியவர்களுக்கு சீட்டுக் கட்டு, செஸ் போர்டு.. எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட், உத்தர்காஷியில் சுரங்கம் தூண்டும் போது திடீரென ஏற்பட்ட விபத்தினால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்ட 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். 

இவர்களை மீட்கும் பணிகள் சுமார் 13 நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. 

பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டு வந்ததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கியுள்ள 41 ஊழியர்களும் எப்போது மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்கள் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள அவர்களுக்கு செஸ் போர்டு மற்றும் சீட்டு கட்டு போன்றவற்றை அனுப்ப மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர். 

கடந்த 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ளதால் மனநிலையை உறுதியாக வைத்துக் கொள்ளும் வகையில் இவை உதவியாக இருக்கும் என மீட்புபடையினர் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mining accident victims Playing cards


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->