ஒரு கோடி தரேன்.. இறந்த மகளை முதல்வர் உயிருடன் தருவாரா? ஆதங்கத்தை கொட்டிய தந்தை.!  - Seithipunal
Seithipunal


பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் 30 அடி உயர தூண் நேற்று இடிந்து விழுந்த காரணத்தால் 28 வயதான தேஜஸ்வினி என்ற பெண்ணும் அவருடைய மகன் விகான் (2 வயது) ஆகியோர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். 

இதில் காயம் அடைந்த தேஜஸ்வினியின் கணவர் ரோகித் மற்றும் அவரது மகள் வீணா இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கர்நாடக முதல்வரான பொம்மை தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இத்தகைய நிலையில் தேஜஸ்வினியின் தந்தை, "எனது மருமகன் கண் விழித்ததும் மனைவி, மகன் இறந்ததை கேள்விப்பட்டு அழுதார். அவருடைய இழப்பை அரசால் ஈடுகட்ட முடியுமா? எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன் இறந்து போன என்னுடைய மகள் தேஜஸ்வினியை மீட்டு தர முடியுமா? 

இந்த விஷயத்தில் அலட்சியத்துடன் செயல்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும். இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுக்க விட்டால் நிறைய மக்களின் உயிர் பறிபோகும் ஆபத்து இருக்கிறது." என்று அவர் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro rain accident issue Father raised questions


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->