சட்டை பட்டன் போடாததால் மெட்ரோவில் பயணம் செய்ய மறுக்கப்பட்ட இளைஞர் -  பெங்களூருவில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தொட்டகல்லாசந்திரா மெட்ரோ நிலையத்திற்கு இருபது வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் பயணம் செய்ய வந்துள்ளார். ஆனால், அவரை பார்த்த மெட்ரோ ஊழியர்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியதுடன் அவரை மெட்ரோவில் பயணிப்பதற்கு அனுமதிக்கவில்லை. 

இதைபார்த்த பொதுமக்களில் சிலர் ஊழியர்களிடம் காரணத்தை கேட்டுள்ளனர்.அதற்கு ஊழியர்கள், ”எங்களுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு ஏதும் கிடையாது. ஆனால் சந்தேகிக்கப்படும் பயணி, மது போதையில் இருந்ததாலும், தனது சட்டை பட்டன்களை போடாமலும், அழுக்கு ஆடையும் அணிந்து இருந்ததால், இவரால் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதும் ஆபத்து வராமல் இருப்பதற்காக தடுத்து நிறுத்தினோம்” என்று தெரிவித்தார். 

இதனை, சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவேற்றி பாஜகவின் எம்பியான தேஜஸ்வி சூர்யாவை டேக் செய்துள்ளார். அத்துடன், “ஆடையை காரணம் காட்டி சேவை மறுக்கும் சம்பவம் தற்போது என் கண்முன்னே நடந்துள்ளது. சட்டையின் இரண்டு மேல் பட்டன் போடவில்லை எனக் கூறி தொழிலாளி ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். நம்ம மெட்ரோ இப்படித்தான் இருக்கிறதா?” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro employees avoid youth travel in train


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->