மங்களூருவில் ஒரு மாதத்திற்கு ரூ.7 லட்சத்து 71 ஆயிரத்து 72 ரூபாய் மின்கட்டணம் வந்த அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மங்களூருவில் ஒரு மாதத்திற்கு ரூ.7 லட்சத்து 71 ஆயிரத்து 72 ரூபாய் மின்கட்டணம் வந்த அதிர்ச்சி சம்பவம்.!

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் அரசு ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே மின்கட்டணத்தை அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எப்போதும் ஒவ்வொரு மாதமும் 5-ந்தேதி மின்சார பயன்பாட்டை அளவீடு செய்து கட்டண ரசீது வழங்குவது வழக்கம். 

ஆனால் கடந்த மே மாதம் மின்கட்டணம் அளவீடு செய்து ரசீது தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ரூ.200, ரூ.300 கட்டணம் வந்து கொண்டிருந்த வீட்டு மின் இணைப்பு உடையவர்களுக்கு இரு மடங்கு, முன்று மடங்கு கட்டணம் வந்துள்ளதாக ரசீது கொடுக்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லாலை பகுதியை சேர்ந்தவர் சதாசிவ ஆச்சார்யா. இவரது வீட்டுக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.3 ஆயிரம் மின்சார கட்டணமாக வந்துள்ளது. ஆனால், கடந்த மே மாதம் மின்சார கட்டணமாக அவரது வீட்டுக்கு ரூ.7 லட்சத்து 71 ஆயிரத்து 72 வந்துள்ளதாக மின்அளவீடு செய்த மின்வாரிய ஊழியர் ரசீது கொடுத்துள்ளார். 

அந்த ரசீதில் சதாசிவ ஆச்சார்யா 99 ஆயிரத்து 338 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சதாசிவ ஆச்சார்யா, மின்வாரிய ஊழியரிடம் மின்கட்டணம் பல மடங்கு கூடுதலாக வந்து இருப்பது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன் படி சதாசிவ ஆச்சார்யா புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் அதிகாரிகள் ரூ.2,833 மின்கட்டணமாக செலுத்தும்படி கூறி புதிய மின்கட்டண ரசீதை வழங்கியுள்ளனர். தவறான மின் அளவீடு செய்வதில் இந்த குளறுபடி நடந்து இருப்பதாக மெஸ்காம் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man shock for seven lakhs electricity bill in magalor


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->