'மேற்கு வங்கம் உபி இல்லை' ராம்புராட் கலவரம் குறித்து மம்தா ஓபன் ராக்.!  - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்திய கூட்டம் ஒன்றில் ராம்புராட் கலவரம் குறித்து, 'மேற்கு வங்க மாநிலம் உத்திரப்பிரதேசம் இல்லை.' என்று தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்புராட் பகுதியில் கிராம ஊராட்சி துணை தலைவர் கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 8 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசியபோது, "ராம்பூராட் கலவரம் எதிர்பாராத அசம்பாவிதம். இந்த மாநிலத்தில் இருக்கும் அனைத்து மக்களுமே எங்களுடைய மக்கள். 

யாரையுமே பாதிப்புக்குள்ளாக்குவதை நான் விரும்பவில்லை. இந்த கலவரம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். நாளை இந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட இருக்கிறேன். மேற்கு வங்க மாநிலம் உத்திரப்பிரதேசம் போல அல்ல. 

ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் கூட கலவரங்கள் நடக்கின்றது. இந்த கலவரத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயம் நீதி கிடைக்கும் வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்." என்று உறுதி அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamata banarjee about rampurat issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->