ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாகிய விவசாயி.! அப்படி என்ன செய்தார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயம் எதிர்பாராத அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அதிலும் தக்காளியின் விலை ₹.150 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. அரிசி, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் மத்தியில் கடுமையான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழையினால் சந்தைகளுக்கு வரத்து போதுமானதாக கிடைக்கவில்லை. எனவே இந்தப் பொருட்களின் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. 

விலைவாசி உயர்ந்துள்ள காரணத்தால் அத்தியாவசிய பொருட்களான தக்காளி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்ற இந்த நேரத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு விவசாயி தக்காளியை விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்த பகோஜி கயாகர் எனும் விவசாயி 12 ஏக்கர் அளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். கடந்த மாதத்தில் மட்டும் 20 கிலோ எடை கொண்ட 13000 தக்காளி பெட்டிகளை விற்று ₹.1.5 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார். ஒவ்வொரு 20 கிலோ தக்காளி பெட்டியையும் அவர் ₹.1500 முதல் ₹.2500 வரை விலை பேசி விற்றுள்ளார். இதன் மூலம் ஒரே மாதத்தில் அவர் கோடீஸ்வரனாகியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra format Become billionaire selling Tomato


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->