"அன்பு தான் சார் எல்லாமே" காப்பாற்றிய நபரை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாரை! - Seithipunal
Seithipunal


தன்னைக் காப்பாற்றிய நபரை நீண்ட நாட்கள் கழித்து பார்த்த நாரை துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம்  கான்பூர் அனைவரையும் பரவசம் கொள்ளச் செய்தது.

அன்பு என்பது எல்லா உயிர்களுக்கும் சமம் தான் என்பது போன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் அமேதியில் வசித்து வரும் முகமது ஆரிப் என்பவர் அப்பகுதியில் காயமடைந்த நாரை ஒன்றை மீட்டு பராமரித்து வந்தார்.

அந்த நாரை அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து செல்லும். அவருடன் இணைபிரியாமல் இருந்து வந்தது. நாரை இவரது வீட்டில் இருப்பதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் அதனை இவரிடமிருந்து மீட்டு கான்பூர் வனவிலங்கு பூங்காவில் கொண்டு அடைத்தனர்.

இந்நிலையில் ஆரிப் மீண்டும் கான்பூர் வனவிலங்கு பூங்காவுக்கு சென்று அந்த நாரையை சந்தித்திருக்கிறார். அப்போது மகிழ்ச்சி தாங்க முடியாமல் அந்த நாரை துள்ளிக்குதித்து வட்டம் அடித்த காட்சி  காண்போர் அனைவரையும் நெகிழச் செய்தது. இது தொடர்பான காணொளி ஒன்று  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love is everything pelican expressing happiness at the person who saved everything


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->