நீதிமன்றத்தில் காதல் ஜோடியை துரத்திய போலீஸ் - வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


நீதிமன்றத்தில் காதல் ஜோடியை துரத்திய போலீஸ் - வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.!

சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் தீபிகா. இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது, அவருக்கு அம்பத்தூரில் தங்கி வேலைபார்த்து வந்த காரைக்காலை சேர்ந்த கவுதம் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் தீபிகாவைக் கண்டித்தனர். இதனால், தீபிகா கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் பதிவு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், தீபிகாவின் பெற்றோர் தங்களது மகளைக் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் என்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து போலீஸார் மாணவியைத் தேடி காரைக்கால் சென்றனர். இந்தத் தகவலை அறிந்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அதன் படி அங்கு வந்த போலீசார் அவர்களைத் துரத்தி பிடிக்க முயன்றுள்ளனர்.

உடனே நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் போலீசாரை தடுத்தனர். அப்போது காதல் ஜோடியின் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழைக் காண்பித்து, பெற்றோர் மிரட்டுவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 

இதைத்தொடர்ந்து, தீபிகா நீதிமன்ற வாசலில் தனது நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, காதல் கணவருடன் சென்றார். இந்தச் சம்பவத்தால் காரைக்கால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love couples took refuge in karaikal court


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->