நெட்வொர்க் கிடைக்காததால் மலை உச்சிக்கு படிக்க சென்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்.! - Seithipunal
Seithipunal


நெட்வொர்க் கிடைக்காததால் மலை உச்சிக்கு படிக்க சென்ற 3 மாணவர்களை மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 185 கிலோமீட்டர் தொலைவிலுள்ள முண்டகம் என்னும் மலை கிராமத்தில் இணைய வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் நேற்று மதியம் ஆன்லைனில் படிப்பதற்காக மலை உச்சிக்கு சென்றுள்ளனர்.

மலை உச்சிக்கு சென்றால் நெட்வொர்க் நன்றாக கிடைக்கும் என்பதால் அங்கு அவர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில் ரொம்ப நேரமாகியும் மாணவர்கள் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் அவர்களை தேடிச் சென்றனர்.

அப்போது, அங்கு 3 மாணவர்களும் மலை உச்சியில் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனையடுத்து மாணவர்கள் 3 பேரையும் அருகில் உள்ள பொது சுகாதார மையத்திற்கு அழைத்து சென்றனர். 

இதில், ஒரு மாணவரின் நிலை உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்ற 2 மாணவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக  மாவட்ட முதன்மை மருத்துவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lightning attack Odisha Students Studied in hills


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->