ஊழல் வழக்கு: ED விசாரணைக்கு ஆஜரான லாலு பிரசாத் யாதவ்! - Seithipunal
Seithipunal


பீகார் முன்னாள் முதல் மந்திரியும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ரயில்வே துறையில் பணி வழங்குவதற்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். 

இவருடன் மூத்த மகளும் ராஜ்யசபா எம்பியுமான மிசா பார்தியும் வந்தார். லாலு பிரசாத் யாதவியின் விசாரணைக்கு முன்பு, அமலாக்க துறை அலுவலகத்தில் ஏராளமான ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவாளர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மிசா பார்தி, நாங்கள் அமலாக்கதுறை விசாரணைக்கு வருவது புதிதல்ல. பாஜகவின் பின்னால் இல்லாதவர்களுக்கெல்லாம் சம்மன் வழங்கப்படுகிறது. 

விசாரணை அமைப்புகள் எப்பொழுதெல்லாம் எங்களை அழைக்கிறதோ அப்பொழுது எல்லாம் நாங்கள் ஒத்துழைப்போம். 

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறோம். அனைத்தும் மக்கள் முன்பாகவே நடந்து கொண்டுள்ளது. மக்கள் அனைத்தையும் பார்க்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lalu Prasad Yadav appeared ed investigation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->