போலீசாக இருந்தாலும் தாய் உள்ளம் மாறுமா.? கடத்தப்பட்ட குழந்தைக்கு பால் கொடுத்த பெண் போலீஸ்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தின் கோழிக்கோடு சேவயூர் காவல் நிலையத்தில் ரம்யா என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 22 ஆம் தேதி ஆஷிகா என்ற ஒரு பெண் இரண்டு வாரம் கூட முழுமையாக தனது குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். 

அந்த குழந்தையை கணவரும், மாமியாரும் சேர்ந்து தூக்கிக் கொண்டு தலைமுறைவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குழந்தை பெங்களூருக்கு கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து இருக்கின்றனர். 

குழந்தை மிகவும் பசியால் வாடி மயக்க நிலையில் இருந்ததை கண்டறிந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். தாய்ப்பால் குடிக்காததால் அந்த குழந்தைக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ரம்யா தான் தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். 

மருத்துவர்கள் அனுமதி கொடுத்தவுடன் காவலர் ரம்யா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய் ஆஷிகாவிடம் அந்த குழந்தையை ஒப்படைக்கும் வரை தாயுள்ளதோடு குழந்தையை காப்பாற்றியுள்ளார் ரம்யா. 

இது குறித்து காவலர் ரம்யா, "ஒரு வயதில் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை பசியால் அழுதபோது எனது குழந்தை நினைவு தான் வந்தது. எனவேதான் பால் கொடுத்தேன். என் வாழ்வில் அர்த்தமுள்ள நாளாக இதை நான் கருதுகிறேன்." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala police give milk to victims baby


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->