கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் வருகிற மே 7-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இடுக்கி மாவட்டத்திற்கு இன்றும், மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை இருக்கும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala next 3 days heavy rain and yellow Alert


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->