கேரளாவில் கனமழை தீவிரம்: 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தகவல்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இடுக்கி போன்ற சில மாவட்டங்களில் கன மழை பெய்ததால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது. கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில் உருவாக்கியுள்ள புயல் சுழற்சியின் தாக்கத்தால் வருகின்ற 30ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருகின்ற 29 மற்றும் 30ம் தேதிகளில் கேரளாவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதே சமயத்தில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் கேரள கடற்கரை பகுதியில் அதிக அலை அடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடல் அலைகள் சுமார் 1.8 மீட்டர் உயரம் வரை எழுந்து அலையடிக்கும் என்பதால் கடலோர கிராமங்களுக்குள் கடல் நீர் புகும் வாய்ப்புள்ளதாகவும் கடலோர கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடல் அலைகள் உயரமாக எழும் என்பதால் கடலுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala heavy rains extend 30th


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->