காஷ்மீரில் பதற்றம்.. இணைய சேவைகள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு மற்றும் காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா நகரில் மசூதி ஒன்றில் இருந்து மோதலை தூண்டும் வகையில் அறிவிப்பு அடங்கிய வீடியோ ஒன்று வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதையடுத்து இது குறித்து பதர்வா காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது .மேலும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிஷ்த்வார் மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்டர்நெட் சேவையை முடக்கப்பட்டுள்ளது. 

சமூக ஊடக பதிவால் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்ந்து பதர்வா நகரில் ஊரடங்கு பிறப்பித்து, இன்று காலை முதல் இன்டர்நெட் சேவை மூடப்பட்டுள்ளது. காஷ்மீரில் மக்களவைத் தொகுதி எம்பியான மத்திய மந்திரி ஜிதேந்தர் சிங் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தோடா மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பதர்வாவில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kashmir lockdown and internet service outage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->