வகுப்பறையில் பேசிய மாணவிகளை பாகிஸ்தான் போகச் சொன்ன ஆசிரியர்! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, ஷிவமோகாவில் செயல்பட்டு வரும் உருது பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழி பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

மாணவிகளிடம் இந்தியா இந்துக்களுக்கான நாடு என தெரிவித்து அனைவரும் பாகிஸ்தானுக்கு போகுமாறு தெரிவித்திருக்கிறார். 

உருது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 2 பேர் வகுப்பறையில் பேசியதால் கோபமுற்ற ஆசிரியர் மாணவிகளை கடுமையான முறையில் வசைபாடினார் என தெரிவிக்கப்படுகிறது. 

கனடா மொழிப்பாடம் நடத்தி வரும் இந்த ஆசிரியர் மாணவிகளிடையே நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள் இந்திய நாடு இந்துக்களுக்கானது என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறை இடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் பள்ளி கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளது. 

மேலும் இது குறித்து பள்ளி கல்வித்துறை அலுவலர் தெரிவித்திருப்பதாவது, நாங்கள் அந்த ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்திருக்கிறோம். 

துறை ரீதியிலான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிக்கை வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இந்த ஆசிரியர் 26 ஆண்டுகள் அனுபவம் மிக்க உருது பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka teacher sparks row


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->