வாக்காளர்களுக்கு 'குக்கர்கள்' விநியோகம்... தயாரிப்பு நிறுவனத்திற்கு பறந்த திடீர் நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, பெங்களூர் ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல் மந்திரி டி.கே. சிவக்குமாரின் சகோதரரும் எம்.பியுமான டி.கே. சுரேஷ் போட்டியிடுகிறார். 

இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் டாக்டர் சி.என். மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இதற்கிடையே தேர்தல் விதிமுறைகளை மீறி சிவகுமார் மற்றும் சுரேஷ் வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். 

மேலும் இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் ஊரகத் தொகுதியில் வாக்காளர்களுக்கு சுரேஷ் புகைப்படத்துடன் கூடிய 10 லட்சம் பிரஷர் குக்கர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதுவரை 4 லட்சம் குக்கர் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் குமாரசாமி புகாரை தொடர்ந்து பெங்களூரு பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka cooker manufacturing company income tax notice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->