சென்னையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 3 இளம்பெண்கள்.. பிடித்து விசாரித்ததில் பகீர் உண்மை.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் தனியார் காலேஜ் ஒன்றில் படித்த மூன்று மாணவிகள் திடீரென காணாமல் போயிருந்தனர். 

தனியாருக்கு சொந்தமான விடுதி ஒன்றில் இந்த மூன்று மாணவிகளும் படித்து வந்துள்ளனர். இந்த கல்லூரி விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் மூவருமே இணைபிரியாத தோழிகள். எங்கு சென்றாலும் மூவரும் ஒன்றாக தான் செல்வார்களாம். இத்தகைய நிலையில் அவர்கள் மூன்று பேரும் கடந்த 20ஆம் தேதி கல்லூரி விடுதியில் இருந்த தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு ஜன்னலை உடைத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் இருந்த அறையை சோதனை நடத்திய போது ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அதில் தாங்கள் ஒரு தேர்வில் சரியாக எழுதவில்லை என்றும், எனவே அதன் முடிவு வரும் பொழுது எங்கள் பெற்றோர்களை எங்களால் சமாளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னையில் சந்தேகத்திற்கு இடமாக மூன்று மாணவிகள் சுற்றி திரிந்து வந்தது போலீசாரால் கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் மங்களூர் மாணவிகள் என்பதை தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மாணவிகளை அழைத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka 3 college Girls escaped from Hostel


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->