ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரின் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மெகபூபா முப்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தற்பொழுது ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி இருந்து வரும் நிலையில் அதற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். 

அவருடன் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆப்கானிஸ்தான் போல் அழிக்கப்பட்டு வருவதாக கைதான மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu Kashmir ExCM Meghbooba Mufti arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->