மும்பை பயங்கரவாத தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது - ஜெய்சங்கர் - Seithipunal
Seithipunal


ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளவர்லி, காபோன் வெளியுறவு மந்திரி மைக்கேல் மௌசா அடமோ, கானா வெளியுறவு மந்திரி ஷெர்லி அயோர்கர் போட்ச்வே, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஐக்கிய அரபு அமீரக மந்திரி ரீம் இப்ராஹிம் அல் ஹாஷிமி, அல்பேனிய துணை வெளியுறவு மந்திரி மெகி பினோ மற்றும் ஐநா துணை செயலாளர் ஜெனரல் விளாடிமிர் வோரோன்கோவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை ஒருபோதும் மறக்காது முடியாது. இது மும்பை மீதான தாக்குதல் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தின் மீதான தாக்குதல் என்றார்.

மேலும் பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா-வால் போதிய வெற்றியை பெற முடியாததற்கு அரசியல் காரணங்கள் உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 

மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

மேலும் பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் ஒன்றாக சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaishankar says will never forget the Mumbai terror attack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->