இந்திய விமானப்படையில் அக்னிபாத் வீரராக  வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு இராணுவத்தில் சேவையாற்றும் வகையில், இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : அக்னிபாத் விமானப்படை வீரர் 

வயது : 27-06-2002 - 27-12-2005 (இடையில் பிறந்தவர்கள் மட்டும்)

சம்பளம் :  மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். 4 ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி : இயற்பியல்/கணிதம்/ஆங்கில பாடங்களுடன் கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாடநெறிகளுடன் 10+2/சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, அடாப்ளிடி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் அக்னிவீர் பணிசேர்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.11.2022

விமானப்படை அக்னிவீர் தேர்வு தேதி: 2023 ஜனவரி 18 முதல் 24

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மேலும், விபரங்களுக்கு https://agnipathvayu.cdac.in/AV/
என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Air force agnipath employment today last day of apply


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->