வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! சென்னைக்கு மேலும் ஒரு பெருமை! - Seithipunal
Seithipunal


ஜெர்மனியில் கடந்த மாதம் உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஆனது பயன்பாட்டுக்கு வந்தது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாற்று எரிபொருளாக ஹைட்ரஜன் உள்ளது. அதை போல் வேகம் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட பல அம்சங்கள் மற்ற ரயில்களை விட ஹைட்ரஜன் ரயிலில் சிறந்து விளங்குகிறது.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பெற்ற நிகழ்ச்சிய ஒன்றில் பேசிய மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வின் வைஸ்னவ் தெரிவித்துள்ளார்.

 மேலும் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகின் தலைசிறந்த ரயில்களில் ஒன்றாக இந்த ரயில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . இந்த ரயில் தயாரிப்பு பணிகளானது சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. எனவே சென்னைக்கு மேலும் ஒரு பெருமையாக இந்த ரயில் விளங்கும் என நம்பலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India first hydrogen train is coming on 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->